ஹோர்முஸ் நீரிணை எவ்விதத் தடையுமின்றி "இயல்பாகவே திறக்கப்படும்" - ட்ரம்ப் நம்பிக்கை
#War
#IranVsIsrael
#DonaldTrump
Soruban
2 hours ago
ஈரானுடனான இராணுவ மோதல்கள் முடிவுக்கு வரும்போது, உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை எவ்விதத் தடையுமின்றி "இயல்பாகவே திறக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போரின் கடினமான பகுதிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகத் குறிப்பிட்ட அவர் எஞ்சியுள்ள நடவடிக்கைகள் மிக எளிதானவை என்றும், போர் முடிவடைந்ததும் எவ்வித விசேட முயற்சிகளுமின்றி கடல்வழிப் போக்குவரத்து சீராகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஈரான் மீதான போர் நடவடிக்கைகளால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், கடல்வழிப் பாதையை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவது தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் கவனிக்கப்படுகின்றது.